தமிழ்நாடு

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் உள்ளன? அறிக்கை அளிக்க உத்தரவு

8th Aug 2022 11:47 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் உள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள்கட்டமைமப்பு வசதி உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழக அரசு இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானி பெறும் ஊதியம் எவ்வளவு? ஆச்சரியம் தரும் ஆண்டறிக்கை

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்புகள் வசதி உள்ளது என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆளுநருடன் அரசியல் பேசினேன்; ஆனால் அதுபற்றி சொல்ல முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு  வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகள் வகுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT