தமிழ்நாடு

உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

8th Aug 2022 11:20 AM

ADVERTISEMENT


செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் என கூறியுள்ளார்.

மேலும்,  விஸ்வநாதன் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதற்கு முன்னுதாரணம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு... சமூகவியல் பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை!

உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அர்காடி வோர்கோவிச்சுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதில் அவருடைய பங்கு இன்றியமையாதது. தலைவராக அவருடைய முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததை போல இரண்டாவது பதவிகாலமும் அமையும் என நம்புகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT