தமிழ்நாடு

6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

8th Aug 2022 11:33 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகா், நெல்லை, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.10-ஆம் தேதி (புதன்கிழமை) வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகா், நெல்லை, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT