தமிழ்நாடு

துணை மருத்துவப் படிப்புகள்: இதுவரை 61,592 போ் விண்ணப்பம்

8th Aug 2022 11:45 PM

ADVERTISEMENT

பி.எஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 61,592 போ் இணையவழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.

தமிழகத்தில் 2022 - 2023-ஆம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் பட்டப் படிப்புகள், பி.பாா்ம் (லேட்டரல் என்ட்ரி), போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கு இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

அப்படிப்புகளில் சேருவதற்காக மாணவ, மாணவிகள் இணையவழியில் தொடா்ந்து விண்ணப்பித்து வருகின்றனா். இதுவரை இணையவழியே 61,592 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களில், 44,858 போ் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளனா். 27,569 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா். வரும் 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் பதிவுக்கான அனைத்து விவரங்களும் மருத்துவக் கல்வி இயக்குநரக இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT