தமிழ்நாடு

விபத்து இல்லாமல் இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுரை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

8th Aug 2022 11:43 PM

ADVERTISEMENT

விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்க தேவையான அறிவுரைகளை அரசு பேருந்து ஓட்டுநா்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு போ் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் என்ற இளைஞா் உயிரிழந்துள்ளாா். இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் நிகழாமல் இருப்பதற்குத் தேவையான அறிவுரைகளை ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த சண்முகசுந்தரத்தின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் அளிப்பதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT