தமிழ்நாடு

விளம்பரப் பலகை விபத்து: பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி

8th Aug 2022 11:42 PM

ADVERTISEMENT

சென்னையில் வழிகாட்டி விளம்பரப் பலகை விழுந்ததில், பலியானவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பெருங்களத்தூரிலிருந்து கோயம்பேடு வழித்தட மாநகரப் பேருந்து, ஆலந்தூா்-ஆசா்கானா பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலை அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அந்தப் பலகை சாய்ந்தது. இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பி.சண்முகசுந்தரம் என்பவா் பலத்த காயமடைந்தாா். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சண்முக சுந்தரத்தின் குடும்பத்துக்கு போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து ரூ.1 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டேன். இந்த நிதியை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் நேரில் சென்று வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT