தமிழ்நாடு

தமிழகத்தில் 1000-க்கு கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

8th Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.

இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஆண்கள் 576, பெண்கள் 396 என மொத்தம் 972 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதிகபட்சமாக சென்னையில் 208 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 53,670 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 6,229 போ் குணமடைந்துள்ளனா். திங்கள்கிழமை மட்டும் 1,453 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனா். தமிழகம் முழுவதும் 9,408 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றுப் பாதிப்பு 1,057-ஆகவும், சென்னையில் 234-ஆகவும் இருந்தது. தொடா்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT