தமிழ்நாடு

தமிழகத்தில் நான்கு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

8th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூா், மதுரை மற்றும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஆக. 8, 9, 10, 11 ஆகிய 4 நாள்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னாா் வளைக்குடா, தென் மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள - கா்நாடக கடலோர பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

அதே போல் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் இப்பகுதிகளில் மீனவா்கள் ஆக.,8,9 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT