தமிழ்நாடு

மருத்துவத்துக்காக மக்களை அலைய விடுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

8th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, மருத்துவத்தைத் தேடி மக்களை திமுக அரசு அலையவிடுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்தை அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு முடக்கி, மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு பயனும் இல்லாத திட்டத்தை திமுக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.

தற்போது, அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என்று மக்களுக்கே தெரியவில்லை.

வெற்று விளம்பரத்துக்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, மருத்துவத்தைத் தேடி மக்களை அலைய வைக்கும் போக்கை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT