தமிழ்நாடு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.52 லட்சம் பறிமுதல்

7th Aug 2022 08:18 PM

ADVERTISEMENT


சென்னை: ஆந்திரத்தில் இருந்து சென்னை வந்த கச்சிக் குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.52 லட்சத்தை ரயில்வே போலீசார்  பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து எழும்பூா் வந்த கச்சிக் குடா எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் ரயில்வே பறக்கும் படை ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனையில்  ஈடுபட்டனா். அப்போது அந்த ரயிலில் பயணம் செய்த சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரின் உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது கட்டு, கட்டாக பணம் மொத்தம் ரூ.52 லட்சம் இருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவா் ஆந்திரத்தை சோ்ந்த கோட்டா வெங்கட் தினேஷ் குமாா்(36) என்பது தெரிய வந்தது. 

இதையும் படிக்க | கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலி: 2 பேர் காயம்

ADVERTISEMENT

அவரிடம் இருந்த பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் இல்லை. மேலும் அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். 

இதையடுத்து கோட்டா வெங்கட் தினேஷ்குமார், அவரிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.52 லட்சத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்  எழும்பூா் ரயில்வே போலீஸாா்.

அந்தப் பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT