தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

7th Aug 2022 07:29 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு முழுவதும் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார். 

அதன் விவரம்:  சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ரித்து உள்ளிட்ட 76 டிஎஸ்பிக்களை மாற்றம் செய்து காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்குத் தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 டிஎஸ்பிக்களில் கண்ணன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மணிமுத்தாறு உதவி காமண்டண்ட், சம்பத் ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு, சுரேஷ் ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க | மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

ADVERTISEMENT

தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக சுந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பணி மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்கள் ஆவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT