தமிழ்நாடு

கெங்கவல்லியில் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி      

7th Aug 2022 02:20 PM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  4வது நினைவு நாளையொட்டி கெங்கவல்லி பேரூராட்சியில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு நகர திமுக  செயலாளர் சு. பாலமுருகன்  தலைமை வகித்தார்.

அமைதி ஊர்வலம்  கடைவீதியில் தொடங்கி, கலைஞர் சிலை வரையில் நடைபெற்றது. அங்கு அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  

இதில் கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் சு. லோகாம்பாள், துணைத்தலைவர்  மருதம்பாள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கவிதா சேகர், லதா மணிவேல், தங்கபாண்டியன், ஹம்சவர்தினி குமார், சையது, முருகேசன், அருண்குமார், சத்யா செந்தில், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், துணை செயலாளர் பாண்டியன், பொருளாளர் மூர்த்தி, நல்லதம்பி, செல்வகிளின்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தனசேகர், வெங்கடேஷ்,   மணி கலந்து கொண்டனர்.    

ADVERTISEMENT

தம்மம்பட்டியில் நகர திமுக செயலாளர் விபிஆர்.ராஜா தலைமையிலும், தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவர் கவிதா விபிஆர்.ராஜா, துணை செயலாளர்கள் கலியவரதராஜ், பழனிமுத்து, கவுன்சிலர்கள் வரதன், ரமேஷ் உள்ளிட்டோர்  முன்னிலையிலும்,  செந்தாரப்பட்டி பேரூராட்சியில் நகர திமுக செயலாளர் எஸ்.பி.முருகேசன் தலைமையிலும், வீரகனூர் பேரூராட்சிப் பகுதியில்  நகர திமுக செயலாளர் பி.ஜி.அழகுவேல் தலைமையிலும், ஒதியத்தூர் ஊராட்சியில் திமுக செயலாளர் செல்வம் எஸ்.எஸ் தலைமையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள், பேரணிகள் நடைபெற்றன. இதில் திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT