தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

7th Aug 2022 06:38 PM

ADVERTISEMENT

 

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கன அடியில் இருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரு சில நாடள்களாக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில்  பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து சில நாள்களுக்கு முன்பு அணை முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர் மழை சனிக்கிழமை சற்று தணிந்திருந்த  நிலையில்,  சனிக்கிழமை இரவு நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரித்தது.

இதையும் படிக்க | சிஎஸ்ஐஆர் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழகத்தின் கலைச்செல்வி நியமனம்!

ADVERTISEMENT

அணையிலிருந்து வினாடிக்கு 1,10,000 கன அடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 நிலவரப்படி, அணைக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,07,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06அடியாகவும் நீர் இருப்பு 93.56 டி.எம்.சியாகவும் இருந்தது. 

அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT