தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாள்: ஒசூரில் அமைதிப் பேரணி

7th Aug 2022 11:37 AM

ADVERTISEMENT

 

ஒசூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நான்காவது நினைவு தினம் மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஒசூர் தாலுக்கா அலுவலகத்தில் அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலக சாலை நேதாஜி சாலை பழைய பெங்களூர் சாலை வழியாக ஒசூர் ராமநகரில் உள்ள அண்ணா சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது.

இந்த பேரணியில் ஒசூர் எம்எல்ஏவும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய். பிரகாஷ் ஓசூர் மாநகர மேயர் மாநகர திமுக பொறுப்பாளருமான எஸ். ஏ. சத்யா மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பி. முருகன் தனலட்சுமி மாவட்ட அவை தலைவர் யுவராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் தா. சுகுமாரன் இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரா. மணி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ராம்நகர் அண்ணாசிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் , மாநகர மேயர் எஸ். ஏ .சத்யா முன்னாள் எம்.எல் ஏ முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT