தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாகாலாந்து முதல்வர் நிஃபியு ரியோ நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக தமிழக அரசு நிலம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
நாகாலாந்து முதலமைச்சர் நிஃபியு ரியோ எழுதியுள்ள கடிதத்தில், 'வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருந்தினர் இல்லம் அமைப்பதற்காக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராபாக்கம் கிராமத்தில் 10,000 சதுர அடி நிலத்தினை நாகாலாந்து அரசுக்கு இலவசமாக வழங்கியதற்கு நன்றி.
மருத்துவ வசதி பெறுவதற்காக வேலூர் மற்றும் இராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைகளுக்கு வரும் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?