தமிழ்நாடு

4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம்?

2nd Aug 2022 03:26 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும், நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் : சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: பக்தர்கள் குளிக்கத் தடை

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிகபட்சமாக சின்னக்கலர், வால்பாறை தலா 13 செ.மீ மழையும், சின்கோனா, சோலையாறு 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT