தமிழ்நாடு

சாலை இல்லாததால் சிறுவனின் உடலை டோலி கட்டித் தூக்கிச்சென்ற கிராம மக்கள்

2nd Aug 2022 08:38 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே சாலை வசதி இல்லாததால் இறந்த சிறுவனின் உடலை 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்புராஜபாளையம் அருகே உள்ள கணவாய் மேடு குட்டை பகுதியில் சுமார் 50கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ளதால் இதுவரை இக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.

இதையும் படிக்க | மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்

ADVERTISEMENT

அர்ஜுன்

கணவாய் மேடு ஸ்கூல் தோப்பு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் என்பவரது 12 வயது மகன் அர்ஜுன்.  ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அர்ஜுனை  விஷப்பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மயக்கம் அடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் தோல் மீது சுமந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பின்னர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆம்பூர்  அரசு ஆரம்ப மருத்துவனைக்கு  அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஜுனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதையும் படிக்க | பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறார்: விலை உயர்வு குறித்து மோடிக்கு சிறுமி கடிதம்

இதனை தொடர்ந்து சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கதவாளம் அடிவார பகுதிக்கு கொண்டு வந்த உறவினர்கள் கொட்டும் மழையிலும்  சிறுவனின் உடலை டோலி கட்டி  கணவாய்மேடு வரை சுமார் 3 கிமீ தூரம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகளை செய்து உடனடியாக சிறுவனின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT