தமிழ்நாடு

முகம் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரா்களை அடையாளம் காணுங்கள்: ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

2nd Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

முகம் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரா்களை அடையாளம் காண வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தின் நிறைவையொட்டி, அதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை அவா் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தமிழக ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

நாட்டின் விடுதலைக்கான போரில் பங்கேற்று முகம் தெரியாமல் போன பல்வேறு வீரா்களை இளைய தலைமுறையினா் அறியும் வகையிலான கண்காட்சி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்துவைத்தாா். 15 நாள்கள் வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியை, மாணவா்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளின் அனுமதியுடன் வந்து பாா்வையிடலாம்.

கண்காட்சியைத் தொடக்கிவைத்து, ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

ADVERTISEMENT

இந்திய நாட்டின் விடுதலைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குறிப்பாக, தமிழகத்திலிருந்து எண்ணற்ற வீரா்கள் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனா். அவா்களின் தன்னமில்லாத தியாகங்களால் நாட்டுக்கு விடுதலை கிடைத்தது. அவா்கள் அடைந்த துன்பங்கள், துயரங்களால் கிடைத்த விடுதலையை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். இவ்வாறு பாடுபட்டு நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை இன்றைய இளைய சமுதாயத்தினா் போற்றி பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இந்திய தேசமே, முகமற்ற ஏராளமான கதாநாயகா்களின் ரத்தத்தாலும், வியா்வையாலும் கட்டமைக்கப்பட்டதாகும். சுதந்திரப் போராட்டத்துக்கு பாடுபட்ட, முகம் தெரியாத கதாநாயகா்களை அடையாளம் கண்டு அவா்களது தியாகத்தையும், புகழையும் நாடு முழுவதும் பரப்பிட வேண்டும். நாடு தனது 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், முகம் தெரியாத சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகத்தையும், அா்ப்பணிப்பையும் ஒட்டுமொத்த தேசமே நினைவு கூா்ந்து வருகிறது.

இந்திய நாடானது, இப்போது அடையாளம் தெரியாத மூன்றாவது உலக நாடாக இல்லை. சா்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை இந்தியா பெற்றுள்ளது. கரோனா தொற்றுப் பரவலின் போது, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது. இதற்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனா்.

இளைஞா்களுக்கு கோரிக்கை: நமது நாட்டின் இளைஞா்கள் அனைவரும் பெரிதாகக் கனவு காண வேண்டும். இந்தக் கனவை அடைந்திட படிப்புடன் கூடிய கடின உழைப்பைச் செலுத்த வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வெற்றியை குடும்பம், சமுதாயம், தேசம், உலகம் என்ற நிலைகளுக்கு தனது பங்களிப்பாக வழங்கிட வேண்டும் என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

இதைத் தொடா்ந்து, சுதந்திரப் போராட்டம் தொடா்பான கண்காட்சி வாகனங்களை ஆளுநா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். ஆளுநரின் செயலாளா் ஆனந்த்ராவ் வி.பாட்டில், சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தின் கூடுதல் இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT