தமிழ்நாடு

10 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்பநிலை உயரும்

DIN

தமிழகத்தில் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 106 டிகிரி வெப்பநிலை வாட்டிஎடுத்தது.

கரூா்பரமத்தி, திருச்சி, திருத்தணியில் 105 டிகிரியும், ஈரோடு, சேலத்தில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், மதுரை நகரம், மதுரை விமானநிலையம், தஞ்சாவூரில் 101 டிகிரியும் பதிவானது.

சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டையில் தலா 99 டிகிரியும், நாமக்கல்லில் 98 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவானது. இதுபோல, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை( ஏப்.30) வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT