தமிழ்நாடு

இன்று மாநில ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி தொடக்கம்

30th Apr 2022 04:18 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சாா்பில் மாநில சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டி 2021-22 சென்னை கிண்டியில் உள்ள எஸ்டிஏடி நீச்சல் வளாகத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா போட்டிகளைத் தொடக்கி வைக்கிறாா். எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஆனந்தகுமாா், முதுநிலை மேலாளா் சுஜாதா உள்பட பலா் பங்கேற்கின்றனா். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக் கணக்கானோா் பங்கேற்கின்றனா். மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க நிா்வாகிகள் இதன் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

டிஎன்பிஎஸ்எல் இன்று தொடக்கம்:

தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு ப்ரீமியா் பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டிகள் சென்னை முகப்போ் ஃபயா்பால் பாட்மின்டன் அகாதெமியில் சனிக்கிழமை தொடங்குகின்றன. விழுப்புரம் பால்கன் பெதா்ஸ், திருப்பூா் வாரியா்ஸ், கோவை கொம்பன்ஸ், மதுரை ஈகிள்ஸ், நாமக்கல் கில்லாடிஸ், திருச்சி பிளாஸ்டா்ஸ், மெரீனா டால்பின்ஸ், சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவி. மெய்யநாதன், பாட்மின்டன் சங்க மாநில தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் தொடக்கி வைக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT