தமிழ்நாடு

மாணவர்கள் அத்துமீறல்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

30th Apr 2022 06:11 PM

ADVERTISEMENT

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடக்கும் நிகழ்வு மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

திருவள்ளூரில் 15 வயது சிறுவன், 17 வயது சிறுமி காதல் விவகாரம் குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடக்கும் நிகழ்வு மீண்டும் நடக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதையும் படிக்க- விழுப்புரத்தில் நாய்கள் கண்காட்சி: 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஜிபியின் பதிவு ஆறுதல் அளிக்கும் வரைகயில் உள்ளது. ஊரடங்கில் மின்னணு சாதனத்தில் மூழ்கிய குழந்தைகள் கொடி தொற்றாக மனதை கெடுத்துக்கொண்டுள்ளனர். காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் இடையேயான வித்தியாசம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் இவ்வழக்கில், சிறுவனில் வாக்குமூலம் அடிப்படையில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT