தமிழ்நாடு

72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை பதிவு

30th Apr 2022 12:53 AM

ADVERTISEMENT

 தில்லியில் கடந்த 72 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக அதிகபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதத்தில் பதிவானது. இந்த மாதத்தில் மாதாந்திர சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு தில்லியின் சராசரி மாதாந்திர அதிகபட்ச வெப்பநிலை 40.4 டிகிரி செல்சியஸ் 2010-ஆம் ஆண்டில் பதிவானது.

தீவிரமான மேற்கத்திய இடையூறுகள் இல்லாததால், அவ்வப்போது லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவில்லை. இதனால் தேசிய தலைநகா் இந்த மாதம் 3 வெப்ப அலைகளைச் சந்தித்தது.

ஏப்ரல் 21-ஆம் தேதியைத் தவிர, அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானது. அதன்படி, மற்ற அனைத்து நாள்களிலும் தில்லியில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது 12 ஆண்டுகளில் தில்லியில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி தேசிய தலைநகரில் அதிகபட்சமாக 43.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல், 1941-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி மாதாந்திர சராசரி அதிகபட்ச வெப்பநிலை 45.6 டிகிரி செல்சியஸாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT