தமிழ்நாடு

நாகை: கோயில் திருவிழாவில் சப்பரத்தில் சிக்கி ஒருவர் பலி

30th Apr 2022 08:41 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வர சுவாமி திருக்கோயில் சப்பர வீதியுலாவில், சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடியில் உள்ள உத்திராபதிஸ்வரர் கோயிலின் சித்திரைப் பெருவிழா நிகழ்வாக வெள்ளிக்கிழமை இரவு (தெருவடைச்சான்) சப்பரம் வீதியுலா நடைபெற்றது.

இந்தச் சப்பரம் தெற்கு வீதியில் திரும்பும்போது, சப்பரத்தின் சக்கரத்துக்கு   முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தீபராஜன் என்பவர் மீது, சப்பரத்தின் சக்கரம் ஏறியது. இதில் பலத்தக் காயமடைந்த தீபராஜன், சிகிச்சைக்காக நாகைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

உயிரிழந்த தீபராஜன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

ADVERTISEMENT

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட  விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினர் பல காலமாக தேருக்கு முட்டுக்கட்டைப் போடும் பணியில்  ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிக்க | நாகை: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT