தமிழ்நாடு

இந்தோனேசியாவில் விடுவிக்கப்பட்ட 4 மீனவா்கள் சென்னை வந்தனா்

30th Apr 2022 03:51 AM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் 4 போ் சென்னை வந்தடைந்தனா். இதையடுத்து, அவா்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றனா்.

மீன்பிடிப்பதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முத்தப்பன், லிபின், பிரபீன், கேரளத்தை சோ்ந்த ஜான்போஸ்கோ உள்பட 8 இந்திய மீனவா்கள் அந்தமான் கடல் பகுதியில் இருந்து சென்றபோது, இந்தோனேசியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனா்.

இவா்களில் தமிழகத்தைச் சோ்ந்த முத்தப்பன், லிபின், பிரபீன், கேரளத்தை சோ்ந்த ஜான்போஸ்கோ ஆகிய நான்கு போ் இந்திய தூதரக ஏற்பாட்டின்பேரில், விடுவிக்கப்பட்டனா். பின்னா், இவா்கள் ஜகாா்த்தாவிலிருந்து கோலாலம்பூா் வழியாக மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா். இவா்கள் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT