தமிழ்நாடு

11 இடங்களில் வெயில் சதம்:வேலூரில் 107 டிகிரி

30th Apr 2022 11:25 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 11 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 107 டிகிரி வெப்பநிலை வாட்டியது.

கரூா் பரமத்தி, தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளியில் தலா 104 டிகிரியும், மதுரை விமானநிலையம், திருத்தணியில் தலா 103 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், ஈரோட்டில் தலா 102 டிகிரியும், மதுரை நகரம், சேலத்தில் தலா 101 டிகிரியும், தருமபுரியில் 100 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரியும் பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT