தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

29th Apr 2022 02:38 PM

ADVERTISEMENT

தமிழகம், புதுச்சேரியில் மே 3 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும்(ஏப். 29, 30) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்(ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி) சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மே 1 முதல் 3 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தில் 2-3 செல்ஸியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும். 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மதுரம் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Rain update
ADVERTISEMENT
ADVERTISEMENT