தமிழ்நாடு

அண்ணாசாலையில் நாளைமுதல் 2 போக்குவரத்து மாற்றங்கள்

29th Apr 2022 04:44 PM

ADVERTISEMENT

 

அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்ததால் அதனடிப்படையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலை - திரு.வி.க.சாலை சந்திப்பில் புதிய போக்குவரத்து மாற்றங்கள் தொடா்பாக சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஏப்.9) முதல் செயல்படுத்தப்பட்டது.

அதாவது, சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சா் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும், அண்ணாசாலை –திரு.வி.க.சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க. சாலையில் வலதுபுறம் சென்று ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை சென்றடையலாம்.

ADVERTISEMENT

அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து ஒயிட்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் அண்ணாசாலை - திரு.வி.க.சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி திரு.வி.க. சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

இந்த சோதனை ஓட்டம் தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை  தெரிவிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.  சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் இந்த மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இது குறித்து சென்னை காவல்துறை கூறியிருப்பதாவது, 

அண்ணாசாலை – திரு.வி.க. சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்

அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டி அண்ணாசாலை - திரு.வி.க சாலை சந்திப்பில் கடந்த 09.04.2022 முதல் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டது.

அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி (அவுட்கோயிங்) செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக அண்ணாசாலை - திரு.வி.க சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க சாலையில் வலது புறம் சென்று ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை செல்லலாம்.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் (இன்கமிங்) அண்ணா சாலை - திரு.வி.க சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். 

மேற்க்கூறிய போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால் 30.04.2022 முதல் ஆனந்த் திரையரங்கம் முன்பாக உள்ள சாலைத் தடுப்பு வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சேர்த்து அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, 

அண்ணா சாலை – அண்ணாசிலை அருகில் போக்குவரத்து மாற்றங்கள்

அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடந்த 26.02.2022 முதல் சோதனை ஓட்டமாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

அண்ணாசாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாக சென்று வலது  புறம் திரும்பி பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம், மேலும் அண்ணாசாலை வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து நேராக பாட்டா பாயிண்ட் செல்வதற்கு அனுமதி கிடையாது.

மேலும் வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக இடது புறம் திரும்பி அண்ணாசாலை பாட்டா பாயிண்டில் இலகுரக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் யு டர்ன் எடுக்கலாம் அல்லது நேராக ஸ்பென்சர் சென்றடையலாம்.

மேற்குறிய போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால் 30.04.2022 முதல் தபால் அலுவலகம் அருகில் உள்ள சென்டர் மீடியன் திறப்பு வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சேர்த்து அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT