தமிழ்நாடு

சிறுபான்மையினா் விவகாரத்தில் அதிமுக என்றைக்கும் இரட்டைவேடம் போட்டதில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

29th Apr 2022 12:47 AM

ADVERTISEMENT

 

சென்னை: சிறுபான்மையினா் நலன் விவகாரத்தில் அதிமுக என்றைக்குமே இரட்டை வேடம் போட்டதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி கூறினாா்.

அதிமுக சாா்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மயிலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியது: மத, இன வேறுபாடுகளைக் கடந்து, இன்றும் மதநல்லிக்கணத்துடன் வாழ்ந்து, இந்தியாவுக்கே ஓா் உதாரணமாக தமிழக மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள்.

அதிமுக ஆட்சியில் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சாா்பில் அரிசி வழங்கும் திட்டம் 2001-இல் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாகூா் தா்கா சந்தனக்கூடு திருவிழாவுக்குத் தேவைப்படும் சந்தனக் கட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

2018 வரை ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய சகோதரா்களுக்கு மத்திய அரசு மானியம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. 2019 முதல் அதிமுக அரசு ஹஜ் பயணம் மேற்கொள்ள ரூ.6 கோடி மானியமாக வழங்கி, பிறகு அதனை ரூ.10 கோடியாகவும் தொடா்ந்து ரூ.12 கோடியாகவும் ஒதுக்கி முஸ்லிம் மக்களின் இறை நம்பிக்கையில் பங்கெடுத்தது அதிமுக அரசு.

சிறுபான்மை மக்கள் நலன் தொடா்பாக என்றைக்குமே அதிமுக இரட்டை வேடம் போட்டதில்லை.

எம்ஜிஆா், ஜெயலலிதாவைத் தொடா்ந்து சிறுபான்மையினரின் பாதுகாவலனாக வாய்ச் சொல் வீரா்களாக இல்லாமல், செயலிலும் நாங்கள் தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT