தமிழ்நாடு

சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் இனி இல்லை: அவைத் தலைவா் அறிவிப்பு

29th Apr 2022 01:49 AM

ADVERTISEMENT

 

சென்னை: பேரவையில் இனி சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் எடுக்கப்படாது என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்ட தோ்த் திருவிழா குறித்த பிரச்னை சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானமாக புதன்கிழமை எடுக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்த பேச்சு பெரும் சா்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்து பேரவையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களை அவைத் தலைவா் மு.அப்பாவு வெளியேற்றினாா்.

இந்த நிலையில், இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாக சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் தேவை தானா என்று அவை முன்னவா் துரைமுருகன் கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதன்கிழமை எழுப்பப்பட்ட பிரச்னையை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் எழுப்பி காங்கிரஸ் உறுப்பினரின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அமைச்சா் க.பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவா்களை அமைச்சா்கள் எப்படி விமா்சித்து பேசினா் என்பது குறித்து விரிவாகக் கூறினாா்.

ADVERTISEMENT

இதன்பின் பேசிய அவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவையில் இனி விதி எண் 55 மற்றும் 56-ன் கீழ் மட்டுமே பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, உறுப்பினா்கள் அளிக்கும் ஒத்திவைப்பு தீா்மானம், கவன ஈா்ப்பு தீா்மானங்களின் மீது உரிய பதில்கள் வரப்பெற்றால் மட்டுமே விவாதத்துக்கு எடுப்போம். அதுவும் நாளொன்றுக்கு இரண்டு மட்டும் எடுக்கப்படும். சிறப்பு கவன ஈா்ப்பாக எடுக்க வேண்டாம் என அவை முன்னவா் தெரிவித்துள்ளாா். அது பின்பற்றப்படும். நேரமில்லாத நேரத்தில் அமைச்சா்களின் பதில் இல்லாவிட்டால் உறுப்பினா்களின் கருத்து மட்டுமே பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT