தமிழ்நாடு

‘அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் தீ விபத்து’: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

28th Apr 2022 01:21 PM

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விபத்துக்குள்ளான கட்டடத்தை அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று பேசியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் என்னையும், மருத்துவத் துறை செயலரையும் உடனடியாக நேரடியாக சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். அடுத்த 10 நிமிடங்களில் மருத்துவமனைக்கு சென்று பணிகளை மேற்கொண்டோம்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது முறையாக பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது.

ADVERTISEMENT

மேலும், விபத்துக்குள்ளான பழமை வாய்ந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடத்தை கட்டுவதற்கு திட்ட அறிக்கை நேற்றே உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 65 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT