தமிழ்நாடு

அயோத்தியா மண்டபம்: அறநிலையத்துறை உத்தரவு ரத்து

27th Apr 2022 03:49 PM

ADVERTISEMENT

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயிலை நிர்வகிக்க அறநிலயைத் துறை அதிகாரியை நியமித்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிக்க.. பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிா்த்து மண்டபத்தின் நிா்வாக அமைப்பான ஸ்ரீராம் சமாஜ் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் கூறுகையி, தனியாா் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது. அமைப்பு மீது குற்றம்சாட்டி அரசு அனுப்பிய நோட்டீஸில் எந்த விவரமும் இல்லை. அமைப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆதாரங்களுடன் விளக்கம் கேட்டு அரசு விசாரிக்கலாம். விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யப் போகிறோம். இதுகுறித்து புதன்கிழமை தீா்ப்பு பிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அயோத்தியா மண்டபத்தை நிர்வகிக்க அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியா மண்டபத்தை நிர்வகிக்க அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சங்கம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீராம் சமாஜத்தை  கோயில் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறநிலையத்துறை புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT