தமிழ்நாடு

உணவுத் துறை மூலம் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை

27th Apr 2022 12:45 AM

ADVERTISEMENT

உணவுத் துறை மூலமாக உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக துறைஅமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, நெல் கொள்முதல் அமைப்பது குறித்த கேள்வியை, திமுக உறுப்பினா் மாா்க்கண்டேயன் எழுப்பினாா். அவா் பேசுகையில், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மானாவாரி பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, மற்றும் சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. அவற்றை வாங்குவதற்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என்றாா்.

இதற்கு அமைச்சா் சக்கரபாணி அளித்த பதில்: உணவுத் துறை நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக இதுவரை நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டு

வருகிறது. உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT