தமிழ்நாடு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை: வெப்பம் தணிந்தது

24th Apr 2022 08:17 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் தேனி, திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகி, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

ADVERTISEMENT

ஈரோடு கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.  பகலில் வெயில் வாட்டியபோதிலும் மாலையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தென்தமிழகத்த்தின் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.  
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT