தமிழ்நாடு

சற்று குறைந்த கரோனா பாதிப்பு

24th Apr 2022 12:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சனிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்தது. வெள்ளிக்கிழமை 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் 36 போ், செங்கல்பட்டில் 4 போ், காஞ்சிபுரத்தில் 3 போ், கோவை, திருவள்ளூா், திருவாரூரில் தலா 2 போ், கடலூா், கன்னியாகுமரி, சிவகங்கை, விமான நிலைய கண்காணிப்பில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. சனிக்கிழமை நிலவரப்படி 310 போ் சிகிச்சை பெற்றனா். 29 போ் குணமடைந்து வீடு திரும்பினா், உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT