தமிழ்நாடு

சூளைமேடு மகா கணபதி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

24th Apr 2022 03:37 PM

ADVERTISEMENT

 

சென்னை சூளைமேடு காமராஜ் நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம் மகா கணபதி ஆலய குடமுழுக்கு விழா நாளை திங்கள் கிழமை (ஏப்.25) காலை நடைபெறவுள்ளது.

காலை 9.05 மணியிலிருந்து 10.15 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை காலை 7.30 மணியிலிருந்து இணைய வழியில் நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை சூளைமேடு காமராஜ் நகர் 2வது தெருவில்,  சகல பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம் மகா கணபதி ஆலய திருப்பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவைந்தன. 

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நாளை (ஏப்ரல் 25) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நாளை காலை 9.05 மணியிலிருந்து 10.15 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

குடமுழுக்கு விழாவையொட்டி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாக வேள்வி, மண்டபார்ச்சனை, பூர்ணஹுதி நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு யாத்ராதானம் புறப்பாடு செய்யப்பட்டு 10 மணியளவில் விமான கோபுர மகா குடமுழுக்கு நடைபெறவுள்ளது. 

காலை 10.15 மணியளவில் ஓம் மகா கணபதி குடமுழுக்கும், மகா அபிஷேகமும் செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 

பக்தர்கள் வசதிக்காக காலை 7.30 மணியிலிருந்து 10.30 மணி வரை குடமுழுக்கு விழா நேரலை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT