தமிழ்நாடு

மே 8-ல் 1 லட்சம் கரோனா தடுப்பூசி முகாம்கள்: அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

24th Apr 2022 08:19 PM

ADVERTISEMENT

மே-8ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்புக் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஐ.ஐ.டி. வளாகத்திற்கு நேரில் சென்று கரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், கரோனா மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, கரோனா பாதிப்பு என்பது பல்வேறு நிலைகளில் உலகம் முழுவதும் கரோனாத் தொற்று
அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வந்து முற்றுக்கு வந்தாலும், மீண்டும் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, தென்கொரியா போன்ற நாடுகளில் கரோனாத் தொற்று என்பது 10 ஆயிரம் முதல் 1 லட்சம் அளவுக்கு ஒரு வார காலமாக இருந்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தில்லி, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் தினந்தோறும் கரோனாத் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டிருக்கிறது. தில்லியில் ஆயிரத்து 94 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. முப்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க- ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் கரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதக் காலத்தில் கரோனா இறப்பு என்பது இல்லை. நூறுக்கும் கீழ் தொற்று பாதிப்பு இருந்து வந்தது. சென்னை ஐ.ஐ.டியில் ஏப்.19 முதல் நேற்று வரை கரோனா பாதிப்பு என்பது ஏப்.19 அன்று 1 ஆகவும், ஏப்.20 அன்று 2 ஆகவும், ஏப்.21 அன்று 9 ஆகவும், ஏப்.22 அன்று 21 ஆகவும், ஏப்.23 அன்று 22 ஆகவும், நேற்று 5 ஆகவும் கரோனாத் தொற்று குறைந்து இருக்கிறது.
எனவே வரும் மே 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவிற்கு கரோனாத் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1 கோடியே 46 லட்சம் பேருக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 54 லட்சம் பேருக்கும் சேர்த்து 2 கோடி பேரும் இம்முகாம்களில் பயனடைய வேண்டும். 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாகவே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் 8ஆம் தடுப்பூசி செலுத்துவது திருவிழா போன்று தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக நாளை காலை 9 மணிக்கு முதல்வர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளவிருக்கும் கரோனாத் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்த இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், மண்டலத் தலைவர் இரா.துரைராஜ், நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், ஐ.ஐ.டி. இயக்குநர் (பொறு.), மற்றும் ஐ.ஐ.டி., பதிவாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT