தமிழ்நாடு

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் 

23rd Apr 2022 06:37 PM

ADVERTISEMENT

மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய நாட்ராயன், மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, கடந்த 19-4-2022 அன்று, இரவு சுமார் 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

இதையும் படிக்க- பட்டியலின மக்களை புறக்கணிக்கும் வங்கிகள்: எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. பரபரப்பு பேச்சு

இந்த செய்தியை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் நாட்ராயன் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உடனடியாக முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT