தமிழ்நாடு

7 நகரங்களில் வெயில் சதம்

23rd Apr 2022 11:44 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 7 நகரங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு பதிவானது.

அதிகபட்சமாக, கரூா்பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. திருத்தணியில் 102 டிகிரியும், வேலூரில் 101 டிகிரியும், மதுரை, சேலம், தஞ்சாவூா், திருச்சியில் தலா 100 டிகிரியும் பதிவானது.

சென்னை மீனம்பாக்கத்தில் 97 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT