தமிழ்நாடு

காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் தங்கம் இலக்கு:தீபிகா, ஜோஷ்னா, சௌரவ்

23rd Apr 2022 11:05 PM

ADVERTISEMENT

பா்மிங்ஹாம் காமன்வெல்த், ஆசியப் போட்டிகளில் தங்கம் வெல்வதே என எங்கள் இலக்கு என உலக ஸ்குவாஷ் இரட்டையா் சாம்பியன்கள் தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சௌரவ் கோஷல் ஆகியோா் தெரிவித்தனா்.

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலக இரட்டையா் ஸ்குவாஷ் போட்டியில் மகளிா் பிரிவில் தீபிகா-ஜோஷ்னா இணையும், கலப்பு பிரிவில் தீபிகா-சௌரவ் இணையும் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றின. இந்நிலையில் அவா்களுக்கு இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பு ஆயுள்கால தலைவா் என்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினாா். தமிழ்நாடு விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா சிறப்புரை ஆற்றி ஜோஷ்னா, தீபிகா, சௌரவ் உள்ளிட்டோருக்கு ரூ.2.5 லட்சம் வெகுமதி, பரிசளித்தாா். கூட்டமைப்புத் தலைவா் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுச் செயலாளா் போன்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் தீபிகா, சௌரவ், ஜோஷ்னா ஆகியோா் கூறியதாவது:

முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியா சாா்பில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்றிருந்தாலும், உலக சாம்பியன் ஆனது சிறப்பானதாகும். உலக சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என கனவில் கூட நினைக்கவில்லை.

ADVERTISEMENT

அடுத்து 2 மாதங்களில் பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி, சீனாவில் ஆசியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. . அதில் தங்கப் பதக்கம் வெல்வதே எங்கள் முக்கிய இலக்காகும். ஆனால் கரோனா பாதிப்பால் போட்டி ஒத்திவைக்கப்படுமா எனத் தெரியவில்லை. முதல் இலக்கு காமன்வெல்த் போட்டியாகும். அதற்கு பின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக வெளிநாட்டில் தான் சிறப்பு பயிற்சி பெற உள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் குறிப்பிடத்தக்க வகையில் எங்களுக்கு உதவி புரிந்து வருகின்றன எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT