தமிழ்நாடு

ஈஸ்டர் பண்டிகை: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

17th Apr 2022 03:39 PM

ADVERTISEMENT

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்தவ மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும், கிறித்தவ பெருமக்களுக்கு, ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு பெருவிழா நல்வாழ்த்துகள்!

இதையும் படிக்க- ஈஸ்டர் பண்டிகை: மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானைப் போற்றும் இன்னாளில், வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தைப் படைக்க அனைவரும் உறுதியேற்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : Cm Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT