தமிழ்நாடு

கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு 

16th Apr 2022 11:33 AM

ADVERTISEMENT

 


சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி  அருள்மிகு அங்காளம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்ககவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT