தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

16th Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(ஏப்.17,18) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(ஏப்.17,18) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.19: தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

ஏப்.20: கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT