தமிழ்நாடு

உ.பி.யில் சாலை விபத்து: 3 பேர் பலி, 10 பேர் காயம்

16th Apr 2022 11:56 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் மினி டிரக், லாரியுடன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர். 

வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்ரானா எட்டா சாலையில் இந்த விபத்து நடைபெற்றது. 

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ்நாராயன் கூறுகையில், 

ADVERTISEMENT

மினி டிரக்கில் பயணித்தவர்கள் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எட்டாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. 

இதில் விம்லா தேவி (40), சவன்ஸ்ரீ, மித்ராஜ் (75) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT