தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

14th Apr 2022 11:34 AM

ADVERTISEMENT

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இன்று மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

இச்சந்திப்பில், நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்து அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்ததாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேநீர் விருந்தை சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் மமக ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT