தமிழ்நாடு

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை

14th Apr 2022 10:41 AM

ADVERTISEMENT

திருச்சி: அம்பேத்கரின் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந் நிகழ்ச்சியில், மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ந. தியாகராஜன், அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, சீ. கதிரவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி,பகுதி செயலாளர்கள் கண்ணன் காஜாமலை விஜய், மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் ப​டிக்க | அம்பேத்கர் பிறந்தநாள்: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT