தமிழ்நாடு

பெருமாநல்லூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

14th Apr 2022 12:32 PM

ADVERTISEMENT

 

அவிநாசி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா பெருமாநல்லூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெருமாநல்லூர் நான்கு வழி சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விசிக திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார்.

இதில், திருப்பூர் மக்களவைத் தொகுதி செயலாளர் பழ.சண்முகம், விசிக, தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாநில துணை பொது செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் வளவன் வாசுதேவன், பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுசாமி, துணைத் தலைவர் சி.டி.சி.வேலுசாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.  

மேலும், தமிழரின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையும் ப​டிக்க | அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி தீர்த்தக்குட யாத்திரை

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT