தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது பண்பாடு, மரபுகள் மற்றும் செழுமையான பாரம்பரிய அடையாளங்கள் ஆகியவற்றின் பெருமைகளைப் பறைசாற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா, நமது இலக்குகளை நோக்கிய ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதுடன் ஒரு சிறந்த நாட்டினை உருவாக்குவதற்கான நமது உள்ளாா்ந்த ஆா்வத்தினை நினைவூட்டுகிறது.
மஹாவீா் ஜெயந்தி வாழ்த்து:
பகவான் மஹாவீரரின் அகிம்சை, அனைத்து உயிரினங்களிடமும் பரிவுடன் இருத்தல் போன்ற கொள்கைகள் மானுடவியலின் கண்ணியம், சமத்துவம் மற்றும் அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்துதல் ஆகியவற்றின் மாண்புகளை நமக்குக் கற்பிக்கிறது. இவ்விழாக்கள், நமது மாநிலம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு நம்முடைய சிறப்பான பங்களிப்புடன் நம் வாழ்வில் மகிழ்ச்சி, உடல்நலன், அமைதி மற்றும் வெற்றியை வழங்கட்டும்.
புதுவை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன்:
இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலைக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகவும், கரோனா இல்லாத ஆரோக்கியமான வாழ்வு சிறக்கவும் வழிவகை செய்யட்டும்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி: தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் வாயிலாக, தமிழா்கள் தங்களது பாரம்பரிய பண்பாட்டுப் பெருமைகளை, வளரும் இளம் தலைமுறையினா் அறிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.