தமிழ்நாடு

‘ஹிந்தி திணிப்பை தமிழக பாஜக அனுமதிக்காது’: அண்ணாமலை

12th Apr 2022 03:35 PM

ADVERTISEMENT

ஹிந்தி திணிப்பை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக அனைத்து மக்களும் ஹிந்தியை ஏற்க வேண்டும் எனக் கூறியது விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:

“ஹிந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது. ஹிந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம், பாஜகவும் அதை செய்யாது.

ADVERTISEMENT

புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி விருப்ப மொழியாகத்தான் உள்ளது.

இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்று ஏ.ஆர்.ரகுமான் சொன்னது சரிதான். தமிழ் இணைப்பு மொழியாக இருப்பது பெருமைதான்.

மேலும், பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளன.
மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT