தமிழ்நாடு

சைதாப்பேட்டையில் ரூ.7,200 கோடியில் அடுக்குமாடி கட்டடம்: பொதுப்பணித் துறை அறிவிப்புகள்

12th Apr 2022 06:32 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்து புனரமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணிகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைகளில் அமைச்சர் எ.வ. வேலு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

ADVERTISEMENT

சைதாப்பேட்டை, தாண்டர் நகரில் 190 சி வகை அரசு  அலுவலர்களுக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ரூ.7,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

படிக்க | ‘தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட சாலை’: புதிய அறிவிப்புகள்

பொதுப்பணித் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

திறன் மேம்பாடு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக்காக பொறியியல் மற்றும் ஆய்வக உபகரணங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். 

திருவண்ணாமலை மற்றும் வேலூரில் புதிய கூடுதல் சுற்றுலா மாளிகைகள், வாணியம்பாடியில் ஒரு ஆய்வு மாளிகை மொத்தம் ரூ.17.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று கூறினார். 

பொதுப்பணித் துறை புதிய அறிவிப்புகள்: முழு விபரம் -கிளிக் செய்யவும்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT