தமிழ்நாடு

ஹஜ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சிறுபான்மையினர் நலத் துறை அறிவிப்பு

12th Apr 2022 09:22 PM

ADVERTISEMENT

 

65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தகுதியற்றவர்கள் என்று  சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி நடப்பாண்டில் (ஹஜ் 2022) ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கரோனாக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற 65 வயதிற்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

படிக்க'ஊரக வளர்ச்சிக்குத் தேவையான 9 முக்கிய கருப்பொருள்கள்'

ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட
கரோனா, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட
மருத்துவச் சான்று உடையவர்கள் தகுதியானவர்கள்.

ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய
அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஹஜ் பயணத்தில் தவறாது கடைபிடிக்கவேண்டும்

ஏப்ரல் 30 2022 அன்றுள்ளவாறு 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ்
விண்ணப்பதாரர்களும் ஹஜ் 2022க்கு தகுதியற்றவராவர். இதனால், பெண் பயணிக்கு ஆண் வழிதுணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த மெஹ்ரம் விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.

30.04.2022 அல்லது அதற்கு முன்னர் 65 வயதை பூர்த்தி செய்யாத சவூதி
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்–19–க்கு எதிரான
தடுப்பூசிகளை செலுத்தியிருத்தல் வேண்டும்.

வயது தகுதியின்மை காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்திற்கு புதிதாக ஆண் வழித்துணையாக
விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT